கருணாநிதி நூற்றாண்டு விழா: கோவையில் திமுக சார்பில் இருசக்கர வாகன பந்தய போட்டிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் இருசக்கர வாகன பந்தய போட்டிகள் மற்றும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை தடாகம் அடுத்துள்ள மாங்கரை அருகே பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பந்தய போட்டிகள் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் ஆனைகட்டி மதன் வரவேற்று பேசினார்.

ஒன்றிய துணைச் செயலாளர்கள் எம்.ஆர்.டி செல்வராஜ், சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் கே.சி.கே.சம்பத்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தக்குமார், திருநாவுக்கரசு, கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



முன்னதாக கோவை சின்னதடாகம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட துணை அமைப்பாளர் வே.சூரியன்தம்பி ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MAR.K.ஹக்கீம் தலைமை வகித்தார். இதில் இளைஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர்கள் பா.விக்னேஷ், க.நாகராஜ், பி.கே.அருணாச்சலம், உதயநிதிபாபு, மு.மனோஜ் ஆகியோரது முன்னிலை வகித்தனர்.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பாளராக கலந்துக்கொண்டு கொடி அசைத்து இருசக்கர வாகன பந்தய போட்டிகளையும், உறுப்பினர் சேர்க்கையினையும் துவக்கி வைத்தார்கள்.



இரு நிகழ்ச்சிகளிளும் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் அசோக்பாபு ஆறுக்குட்டி, செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக், சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.வி.செல்வராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மு.கனகராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.டி.கோபால்சாமி, நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.என்.ஜி.புதூர் ஆனந்தன், சூற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ் பிரசாத், டி.எஸ்.ஆர்.அருண்பிரசாத், மகளிர் அணி பிரபாவதி, சாந்தி, பிரேமா, மருதமலை சரவணக்குமார், சிறுபாண்மையினர் நல உரிமை பிரிவு முராது அலி, இளைஞர் அணி அருண், அசோக் பிரபு, சுகுமார், பிரபு, திலீப், பிரவின் ராஜ், அசோக் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் இளைஞர் அணி ஜெகன் பிரசாந்த் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...