உடுமலை திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மண்டல பாசனத்திற்காக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முதலாம் மண்டல பாசனம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்காக விவசாயிகள் தண்ணீர் திறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், காண்டூர் கால்வாயின் நல்லாறு பகுதியில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமான பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து நேற்று மாலை காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.



வினாடிக்கு 523 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையில் தேவையான அளவு தண்ணீர் நிரம்பியதும், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 60 அடியில், 28.47 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...