திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்பு

திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்றார். பொதுமக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சென்னை ஆயுதப்படை ஐஜியாக பணியாற்றி வந்தார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் அபிநவு கடந்த மாதம் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லட்சுமி ஐபிஎஸ் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.



பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி, திருப்பூர் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மாநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...