கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாஜக கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாஜக கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 2024 தேர்தல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, தமிழக நலன் குறித்த தீர்மானங்கள் விளக்கப்பட்டன.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் நகர் மண்டல் சார்பாக பாஜக கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக நலன் கருதி பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.



கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் கிளை பொறுப்பாளர் விமல் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு மறைந்த விமலின் தந்தையின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரச்சாரம் துவக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் மகேந்திர ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பல்வேறு மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் வி என் ராஜன், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பொதுச் செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் யோகேஷ், மாவட்டச் செயலாளர் சௌந்தர்ராஜ், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் வேணுகோபால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கிருஷ்ண பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மண்டல் பொதுச் செயலாளர் குணசேகரன், முருகானந்தம், மண்டல் பொருளாளர் பிரதீப், மற்றும் மாநில பொறுப்பாளர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும், மாவட்ட அணி பிரிவு பொறுப்பாளர்களும், மண்டல் பொறுப்பாளர்களும், மண்டல் அணி பிரிவு பொறுப்பாளர்களும், மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நரசிம்மநாயக்கன்பாளையத்தைத் தொடர்ந்து ராக்கிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளிலும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார நிகழ்வுகளில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...