தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்: கங்கா செவிலியர் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு கங்கா செவிலியர் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.


கோவை: கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் கோவை கங்கா மருத்துவமனை இணைந்து தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின. இந்நிகழ்ச்சிகளில் சாலை பாதுகாப்பு மற்றும் காவலர்களுக்கான முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சிகள் உள்ளிட்டவை அடங்கும்.

கங்கா மருத்துவமனை நிறுவன இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் முன்னிலையில், டாக்டர் தனசேகர் ராஜா (மூத்த ஆலோசகர்- ஆர்தோ பிளாஸ்டி, கங்கா மருத்துவமனை) மற்றும் கங்கா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் ஆகியோர் தலைமையில் கொடியசைத்து நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்ற சாலை பாதுகாப்பு குறித்த வினா-விடை மற்றும் பேச்சுப் போட்டி ஆன்லைனில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கோவை என்ஜிஜிஓ காலனி ரயில்வே கேட் அருகில் வாகன நெரிசலை சீர்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களுக்கு உதவினர்.



மேலும், துடியலூர் மற்றும் சாய்பாபா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு CPR (கார்டியோபல்மனரி ரெசஸிடேஷன்) என்னும் உயிர் காக்கும் முறையை கற்பித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

கங்கா செவிலியர் கல்லூரி 2017 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற பல்வேறு சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் காக்கும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...