கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் கூட்டம்: வாகன போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டம் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.


கோத்தகிரியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் தலையிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 அன்று இரவு, கோத்தகிரி செல்லும் சாலையில் வனத்துறை சோதனை சாவடி அருகே காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வந்தது.

இதனையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதன் பின்னரே வாகனங்கள் சாலையில் சென்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காட்டு யானைகளை பார்க்கும் போது வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...