பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் புகார்

பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் சங்கம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. வெளியூர் வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.1,000 வரை கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி மாட்டுச் சந்தை வளாகத்தில் மாநில மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாட்டு வியாபாரிகள் மற்றும் மாடுகளை ஏற்றி வரும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த சில நாட்களாக சந்தைக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிமுகவைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதனைத் தடுத்து மாட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்த தீர்மானத்தின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். வெளியூரிலிருந்து மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அதிமுகவைச் சேர்ந்த சிலர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பணம் தராவிட்டால் மாடுகளை கோசாலைக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டுவதாகவும் மாட்டு வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...