உடுமலை அருகே ஆலங்குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே ஜல்லிபட்டி ஊராட்சியில் உள்ள ஆலங்குளம் புதர் மண்டி காணப்படுவதால், குளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஜல்லிபட்டி ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆலங்குளம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால், தற்போது புதர் மண்டி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஜல்லிப்பட்டி ஊராட்சியைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்களுக்கு இந்த குளம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் மழைக்காலத்தில் ஏற்படும் நீர்வரத்தை தேக்கி வைக்கும் வகையில் குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி பராமரிப்பு செய்வதில் திமுக ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதன் காரணமாக மழைநீர் யாருக்கும் எந்தவித பயனும் இல்லாமல் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குளத்திற்கு நீர்வரத்தை அதிகரிக்கும் பொருட்டு, நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை அகற்றி, குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்றும், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...