வால்பாறையில் தேயிலைத் தோட்ட குடியிருப்பில் தீ விபத்து: பெரும் சேதத்தை தவிர்த்த தீயணைப்புத் துறையினர்

வால்பாறை நல்ல காத்து எஸ்டேட்டில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்புத் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து பெரும் சேதத்தை தடுத்தனர். காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.


Coimbatore: வால்பாறை அருகே நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எஸ்டேட் நிர்வாகம் வழங்கும் குடியிருப்புகளில் தங்கி, தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும்.




நல்ல காத்து எஸ்டேட் முதல் பிரிவில் வசித்து வரும் லட்சுமி என்பவர், காலையில் சாமி கும்பிட்டு விளக்கேற்றி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டின் மேற்கூரை வழியாக புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். லட்சுமியின் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. அருகில் வசித்து வந்த வடமாநில தொழிலாளர் சந்தோஷின் வீட்டிற்கும் தீ பரவியது. ஆனால், தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த வீட்டையும் காப்பாற்றினர்.


தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகள் தொடர் வீடுகளாக இருப்பதால், ஒரு வீட்டில் தீ பற்றினால் ஆறு வீடுகள் வரை சேதமடையும் அபாயம் உள்ளது. இந்நிலையில், தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கை பெரும் விபத்தை தடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...