கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம்

கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அமைச்சர் மகேஷ், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை கந்தராபுரம் அருகே உள்ள எல்.ஐ.சி. காலனி பகுதியில் அமைந்துள்ள குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் மகேஷிடம் மனு அளித்தனர். அதுமட்டுமின்றி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சுந்தராபுரம் காவல் நிலையத்திலும் மனு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி சாலையிலிருந்து குறிச்சிபுதூர் பகுதிக்கு செல்லும் சாலையின் துவக்கம் மற்றும் உட்பகுதியில் உள்ள நான்கு இடங்களில் பொதுமக்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குடியிருப்பு பகுதி மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடத்தில் மதுபான கடை அமைப்பதால் ஏற்படக்கூடிய சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...