பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறப்பு: மகிழ்ச்சியில் பொதுமக்கள்

பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. 16 கிராமங்களின் போக்குவரத்து சீரடைந்தது. பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி கொண்டாடினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதால், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் கடந்த ஆட்சியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது மாற்று பாதை இல்லாததால் மக்கள் வடுகபாளையம் ரயில்வே கேட் வழியாக சென்று வந்தனர். ஆனால், கடந்த ஐந்தாம் தேதி ரயில்வே நிர்வாகம் இந்த கேட்டை மூடியது. இதனால் அவ்வழியே உள்ள 16 கிராமங்களின் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக முத்தூர், தாளக்கரை, நலிக்கவுண்டம்பாளையம் போன்ற கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். இரண்டு கிலோமீட்டர் சுற்றி தங்களது கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமியிடம் ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து, ரயில்வே கேட்டை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, ரயில்வே துறை ரயில்வே கேட்டை திறக்க முடிவு எடுத்தது.



இதனால் மகிழ்ச்சியடைந்த பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...