காரமடையில் வீடு புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு

காரமடை குட்டையூரில் குலதெய்வ கோவிலுக்கு சென்ற தம்பதியின் வீட்டில் திருடர்கள் புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: காரமடை குட்டையூர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த தம்பதி ராஜு - அங்கம்மாள் ஆகியோரின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இக்குடும்பத்தினர் வந்தவாசியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்றுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 6) காலை வீடு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த காரமடை காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருடர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...