திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக் குழுவின் கலந்தாய்வு கூட்டம்: இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த முடிவு

பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக் குழுவின் கூட்டத்தில், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் 19 முதல் 120 நாட்களுக்கு நான்கு சுற்றுகள் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி பி.ஏ.பி. கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழுவின் கூட்டம் ஆகஸ்ட் 6, 2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்திற்கு திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை தாங்கினார். தலைமைப் பொறியாளர் சு.முருகேசன் முன்னிலை வகித்தார். திட்டக்குழு உறுப்பினர்கள் ப.அருண், சி.நித்தியானந்தம், க.நல்லதம்பி, கோ.குருசாமி, ப.ஈஸ்வரன், மு.தெய்வசிகாமணி, மு.ஈஸ்வர மூர்த்தி, ர.பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு கோட்டங்களின் செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட தொகுப்பு அணைகளின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இரண்டாம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் 19, 2024 முதல் 120 நாட்களுக்கு நான்கு சுற்றுகள் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நான்கு சுற்றுகளும் உரிய இடைவெளி விட்டு வழங்கப்படும்.

பாசன காலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட தொகுப்பு அணைகளுக்கு அதிக நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு இருக்கும் பட்சத்தில், கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்படலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதே போல், எதிர்வரும் மூன்றாம் மண்டல பாசனத்திற்கும் 4+1 சுற்றுகள் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக திருமூர்த்தி அணையைத் தவிர மற்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திட்டக்குழு தலைவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...