தமிழ்புதல்வன் திட்ட தொடக்க விழாவிற்கு ரூ.5.50 லட்சம் நன்கொடை

கோவையில் நடைபெறவுள்ள தமிழ்புதல்வன் திட்டத் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுக்காக தமிழ்நாடு சுயநிதி கல்லூரிகள் சங்கம் ரூ.5.50 லட்சம் நன்கொடை வழங்கியது.


கோவை: தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம் சார்பில், தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக ரூ.5,50,000 நன்கொடை வழங்கப்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 9, 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ள தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இந்த நன்கொடைக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முனைவர் என். யசோதா தேவி (செயற்குழு உறுப்பினர், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி), ஏ.எம்.கலீல் (புரவலர், டெக்சிட்டி கலை அறிவியல் கல்லூரி), பேராசிரியர் முனைவர் அஜீத்குமார் லால் மோகன் (தலைவர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்), டி.சேதுபதி (செயலர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...