கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இந்தியா-ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி தொடக்கம்

கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இந்தியா-ஜெர்மனி இடையேயான முதல் கூட்டுப் போர் பயிற்சி ஆகஸ்ட் 6 அன்று தொடங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் பல நாடுகளின் விமானப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையேயான முதல் கூட்டுப் போர் பயிற்சி ஆகஸ்ட் 6 அன்று தொடங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.



இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி மற்றும் ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோரின் தலைமையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. பங்கேற்கும் வீரர்கள் 8 நாட்கள் கோவையில் தங்கி சூலூர் விமானப்படை தளத்தில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஜெர்மன் நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் போர் விமானத்தை இயக்கி கோவையில் தரையிறங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய விமானப் படையுடன் இணைந்து முதல் முறையாக இத்தகைய கூட்டுப் போர் பயிற்சியை கோவை சூலூர் விமானப்படை தளத்தில் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

மேலும் அவர், "ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளில் இதுவரை இதுபோன்ற கூட்டுப் போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தற்போது இந்தியாவில் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

"எதிர்வரும் 8 நாட்களும் இந்த கூட்டுப் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், விமானப்படையில் தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் இது உதவும்" என்று இங்கோ கெர்ஹார்ட்ஸ் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...