கோவை வெள்ளலூர் குளத்தில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு விழா வரும் வியாழன் அன்று நடைபெறுகிறது

கோவை வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்த பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 8 அன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம்பூச்சி இனங்களை பாதுகாக்கவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்கா அரசின் அனுமதியுடன், Milacron India Private Limited (Mold Masters Division), Coimbatore நிறுவனத்தின் நிதியுதவியுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பட்டாம்பூச்சிகளைப் பற்றிய அறிவு மையமாகவும் செயல்படவுள்ளது.

பட்டாம்பூச்சி பூங்காவின் திறப்பு விழா வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8, 2024) அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...