திருப்பூரில் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


Coimbatore: திருப்பூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களிலும் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் மற்றும் இலக்கியப் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து செயல்பட உறுதியேற்றனர் கட்சி நிர்வாகிகள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...