சேலம் ரயில் பாதை பராமரிப்பு: கேரள ரயில்கள் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கம்

சேலம் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆகஸ்ட் மாதத்தில் சில தேதிகளில் கேரள ரயில்கள் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சேலம் பகுதி ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கேரள ரயில்கள் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆலப்புழா - தன்பாத் தினசரி விரைவு ரயில் (எண்: 13352) மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்:12678) ஆகியவை ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் வழக்கமான பாதையில் இயக்கப்படாமல், மாற்று வழியில் இயக்கப்படும்.

இந்த மாற்றம் ஆகஸ்ட் 8, 10, 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில், அதாவது செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் அமலுக்கு வரும். இந்த நாட்களில் குறிப்பிட்ட ரயில்கள் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.

இந்த மாற்றத்தின் காரணமாக, மேற்கூறிய ரயில்கள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை கடந்து செல்வதில்லை. அதற்கு பதிலாக, போத்தனூர் ரயில் நிலையம் தற்காலிக நிறுத்தமாக செயல்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள ரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...