கோவை கார் குண்டு வெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அரபிக் கல்லூரி மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்த்தது அம்பலம்.


Coimbatore: கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே 2022 அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபீன் (28) உயிரிழந்தார். இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சையது அப்துல் ரகுமான், முகமது உசேன், இர்ஷாத், ஜமீல் பாஷா ஆகியோர் ஆவர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் மதப் போதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜமீல் பாஷா அதன் தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் மாவட்ட அளவில், அரபி மொழி மையங்களை பல்வேறு இடங்களில் தொடங்க அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில், முகமது உசேன், இர்ஷாத் ஆகியோர் கோவையில் இம்மையங்களை தொடங்கினர்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், "இங்கு ஜமீல் பாஷாவின் பதிவு செய்யப்பட்ட உரைகள் ஒளிபரப்பப்பட்டன. சையது அப்துல் ரகுமானால் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்ட ஜமேஷா முபீன் கோவை கோட்டைமேட்டில் கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்தினார்" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள்களைத் திரட்டியது, தீவிரவாத பயிற்சி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சையது அப்துல் ரகுமான், முகமது உசேன், இர்ஷாத், ஜமீல் பாஷா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...