கோவை காரமடை அருகே மூளையைத் தாக்கும் அமீபா தொற்றுக்கு எதிராக தீவிர கண்காணிப்பு

கேரளாவில் மூளையைத் தாக்கும் அமீபா தொற்று பரவியதை அடுத்து, கோவை காரமடை அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கேரளாவில் 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையைத் தாக்கும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் கேரளாவில் நான்கு குழந்தைகள் இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். முதன்முறையாக ஒரு இளைஞரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதேபோல, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் 'நிபா' வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார்.

இதையடுத்து, கேரளா முழுவதும் 'நிபா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை காரமடையில் உள்ள கேரள எல்லைப் பகுதியான கோபனாரியில் ஜூலை 22 முதல் தொடர்ந்து நிபா வைரஸ், அமீபா தொற்று போன்ற காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவிலிருந்து வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது ஆகஸ்ட் 7 அன்று காரமடை அருகிலுள்ள கோப்பனாரி, முள்ளி பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கேரளா செல்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக கேரளா செல்வோர் நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...