கோவை காரமடையில் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கோவை காரமடை அருகே திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காரமடை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.



சின்ன தொட்டிபாளையம் அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தார்.

கருணாநிதியின் நினைவை போற்றும் விதமாக 2 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...