கோவை காரமடை நகராட்சியில் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு

கோவை காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு இன்று (ஆகஸ்ட் 7) முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கவுன்சிலர் ராமுகுட்டி முன்னிலை வகித்தார். அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் செண்பகம், ரவிக்குமார், பிரியா, மல்லிகா மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...