அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு கோரி போராட்டம்

பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு, ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC - ACT) MUTA சார்பில் ஆகஸ்ட் 7 புதன்கிழமை அன்று மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி ஏயுடி கிளை சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரி வளாகத்தில் கருப்பு ஆடை அணிந்து நடைபெற்ற இந்த போராட்டம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை மூன்று நாட்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில், பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவை தொகையை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது முக்கியமானது. தற்போது இந்த சலுகை அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், யுஜிசி நெறிமுறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கும் எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குனரின் செயல் முறை ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

புத்தொளி / புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்குதல், கல்லூரி நிர்வாகத்தின் ஆசிரியர் விரோத போக்கினை தடுத்து நிறுத்துதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்துதல் ஆகியவையும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.

இந்த போராட்டத்தில் ஏயுடி கிளை தலைவர் என்.அன்பரசு, செயலாளர் எஸ்.சிவசங்கர், பொருளாளர் சுஜா மேதிவ், துணைத் தலைவர் எஸ் முத்துகுமரவேல், இணைச்செயலாளர் எஸ். சோமசுந்தரம் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...