உலக தாய்ப்பால் வார விழா: பொள்ளாச்சியில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பு

பொள்ளாச்சியில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் தாய்ப்பால் ஊட்டுதலின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், பொள்ளாச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.



இதைத் தொடர்ந்து, தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியம் பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இணை உணவுகளோடு சேர்த்து தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தற்போது வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவது குறைந்து வருவதால், தாய்ப்பால் இல்லாமல் பல்வேறு வகையான மாட்டுப்பால், பவுடர் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்தனர். இந்நிகழ்ச்சி தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...