திருப்பூரில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி: 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

திருப்பூரில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் செலிப்ரேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆஃப் செலிப்ரேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் பவன் குமார் மற்றும் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.



பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய சாலைகளின் வழியாக சென்றனர். பேரணி மங்கலம் சாலையில் உள்ள ரோட்டரி கிளப் அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இந்த நிகழ்ச்சியில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் செலிப்ரேஷன் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...