உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நடைபெற்றது. தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைச்செவ்வி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் தலைமை வகித்தனர்.



விழாவின் ஒரு பகுதியாக, தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் சீனியர் சிவில் சர்ஜன் டாக்டர் ரவி, மகப்பேறு பிரிவு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...