தேக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் தொடர் மழை: மக்கள் மகிழ்ச்சி

காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 7 அன்று மாலை திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 7) மாலை திடீர் மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்ததால், அப்பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேக்கம்பட்டி, தேவனாபுரம், மருதூர், புங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மாலை நேரத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த இந்த மழை, வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பகுதி மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது.

குறிப்பாக விவசாயிகள் இந்த மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...