கோவை பீளமேடு, கோவில்பாளையம், சமத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை

கோவை பீளமேடு, கோவில்பாளையம், சமத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 8) பல்வேறு பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மாநகரில் உள்ள மூன்று முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஆகஸ்ட் 8) பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பீளமேடு புதூர், பாரதி காலனி, நஞ்சுண்டாபுரம் ரோடு, சௌரிபாளையம், கணபதி தொழிற்பேட்டை, புலியகுளம், ராமநாதபுரம், ஆவாரம்பாளையம், திருச்சி ரோடு (பகுதி), உடையம்பாளையம், மீனா எஸ்டேட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம் பாளையம் (கோ இந்தியா பகுதி), வையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கோட்டை பாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், மொன்டகாளிபுதூர் மற்றும் காளிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

சமத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆவல்சின்னம்பாளையம், சமத்தூர், பாளையூர், தளவாய்பாளையம், பொன்னாபுரம், நாச்சிபாளையம், பொள்ளாச்சியூர், ஜமின்கொட்டாம்பட்டி, பில்சினாம்பாளையம், வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...