கவி அருவியில் தடுப்பு வேலிகள் தற்காலிகமாக சீரமைக்கப்படுகின்றன

கோவை மாவட்டம் கவி அருவியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த தடுப்பு வேலிகள் தற்போது சீரமைக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான குளிக்கும் தடை தொடர்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவி அருவியில் தடுப்பு வேலிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததன் காரணமாக கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த தடுப்பு வேலி கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.



தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால் அருவிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், அருவியில் தடுப்புக் கம்பிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், அருவிக்கு நீர்வரத்து சீராகாததால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடுப்பு வேலிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை மற்றும் அருவியின் நீர்வரத்து சீராகும் வரை குளிக்கும் தடை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...