வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினை: முதல்வர் தீர்வு காணாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் எச்சரிக்கை

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு முதல்வர் தீர்வு காணாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் எச்சரித்துள்ளார். முதல்வரின் கோவை வருகையின் போது வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் மனு அளித்துள்ளார். அதில், நாளை கோவைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சரை வெள்ளலூர் குப்பை கிடங்கையும் கைவிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட அழைத்து வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஈசுவரன் கூறுகையில், "நாளை கோவை வரும் தமிழ்நாடு முதலமைச்சர், கோவையின் முக்கிய பிரச்சினையான வெள்ளலூர் குப்பை கிடங்கை நேரில் வந்து பார்வையிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்களைப் பாதிப்பு உள்ளாக்கி இருக்கிற வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது" என்றார்.



"முதலமைச்சர் வந்தாலும் வராவிட்டாலும் உக்கடம் பாலத்தில் வாகனங்கள் ஓடும். ஆனால் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு முதலமைச்சர் வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். கடந்த முறை முதலமைச்சர் வந்த போது உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அவசர வேலைக்காக வந்திருக்கிறார் அவரால் வர முடியாது என்று அதிகாரிகள் சொன்னதால், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "நாளை கோவை வருகிற முதலமைச்சர் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு வந்த ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.



இறுதியாக, "இந்த முறை வெள்ளலூர் பிரச்சினைக்கு முதலமைச்சர் தீர்வு சொல்லாவிட்டால், அடுத்த முறை முதலமைச்சர் கோவை வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம்" என்று ஈசுவரன் எச்சரித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...