பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் 08.08.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் 08.08.2024 அன்று ஒன்றிய குழு தலைவர் விஜய ராணி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒரு மனதாக 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலந்து கொண்ட உறுப்பினர்கள் கிராமங்களில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும், ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.



மேலும், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அந்தந்த துறையில் உள்ள திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களான மோகன் குமார், நாகமணி, தங்கமணி, பிரபு, நாகராஜன், அகிலாண்டேஸ்வரி, மாலினி, சிவக்குமார், மோகனாம்பாள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...