கோவை செம்மொழிப் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும்: அதியமான் வலியுறுத்தல்

கோவை செம்மொழிப் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் வலியுறுத்தியுள்ளார். அரசு உடனடியாக சிலை அமைப்பதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவையில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பது குறித்த அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் உட்பட பல்வேறு பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அதியமான், "கோவையில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. கோவையில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கான தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. இப்போதுள்ள அரசும் அதற்கு எதிராக இல்லை. முறையாக அணுகியிருந்தால் சிலை நிறுவப்பட்டிருக்கும்," என்றார்.



மேலும் அவர், "வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமியின் முயற்சியால் ஈரோட்டில் உடனடியாக டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசியபோது, மிக விரைவில் செம்மொழி பூங்காவிற்கான வேலைகள் தொடங்க உள்ளன. அந்தப் பூங்காவின் முன்னால் டாக்டர் அம்பேத்கரின் சிலையை நிறுவலாம் என்று சொல்லி இருந்தார்," என்று கூறினார்.



"எனவே செம்மொழிப் பூங்காவில் கட்டாயமாக டாக்டர் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட வேண்டும். அரசு உடனடியாக முடிவு செய்து சிலை அமைப்பதற்கான முடிவை அறிவிக்க வேண்டும். நாளை கோவை வரும் முதலமைச்சரை சந்திப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்," என்று அதியமான் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...