உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மோசடி: காவல் நிலையத்தில் புகார்

உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மர்ம நபர்கள் முறைகேடு செய்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் தமிழக அரசால் அங்கீகாரம் பெற்ற 23 ஆவண எழுத்தர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து லோகநாதன், முத்துக்குமார், ஜோதிலட்சுமி, சாத்ராக், சிவசங்கர், மணிவண்ணன், அமுல்ராஜ், அப்பாதுரை, ராஜேந்திரன், ஞானசேகரன் ஆகிய ஆவண எழுத்தர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற அழைப்பாணை வந்துள்ளது.



இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தர்கள் விசாரித்தபோது, மேற்கண்ட 11 ஆவண எழுத்தர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் முறைகேடு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. சார்பதிவாளர் சிவக்குமாரை பணியிட மாற்றம் அல்லது துறை மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சார்பதிவாளர் லஞ்சம் அதிகமாக வாங்குவதாகவும், லஞ்சம் கொடுக்காவிட்டால் பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாகவும் கூறி புகார் அளித்துள்ளனர்.

ஆவண எழுத்தர்களின் பெயர் மற்றும் அலுவலக முகவரியை மர்ம நபர்கள் பயன்படுத்தி, அலுவலக முத்திரையை போலியாக தயாரித்து தவறாக பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் மீது முறைகேடாக ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவண எழுத்தர்கள் சார்பில் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...