கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை கருமத்தம்பட்டி-கணியூர் ஊராட்சியில் கலைஞர் அறிவுசார் நூலகம் மற்றும் 6 அடி உயர கலைஞர் கருணாநிதி வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டி-கணியூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கலைஞர் அறிவுசார் நூலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6 அடி உயர வெண்கல சிலை ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 9) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கலைஞர் அறிவுசார் நூலகம் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை மற்றும் நூலகம், அவரது அரசியல் மற்றும் இலக்கிய பங்களிப்புகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தில் திமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...