உடுமலையில் குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

உடுமலை அருகே மடத்துக்குளம் பகுதியில், குடிபோதையில் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் வேடப்பட்டி பகுதியில் நடந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் பகுதியில், குடிபோதையில் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (45) என்பவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், சரஸ்வதியை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்க முயற்சித்தார்.

இதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும் முரண்பட்டு பேசினார். இதையடுத்து, சரஸ்வதி மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சண்முகசுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் சண்முகசுந்தரம் மீது தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...