மடத்துக்குளம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் குறித்து விளக்கமளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர், திருச்சி செல்லும் வழியில் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டார்.



அமைச்சர் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.



மாணவர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி, பள்ளியில் கல்வி எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை நேரில் கண்டறிந்தார்.



மாணவர்களிடம் பேசிய அமைச்சர், "தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பொதுத் தேர்வை எதிர்நோக்கி திட்டமிட்டுப் படிக்க வேண்டும். தமிழக முதல்வர் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது," என்றார்.

மேலும், "மாணவர்கள் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றது. எனவே, மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்," என அமைச்சர் அறிவுறுத்தினார்.



இதைத் தொடர்ந்து, குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கும் மாணவர்களிடம் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...