பொள்ளாச்சியில் கடன் பிரச்சினையால் காண்ட்ராக்டர் தற்கொலை: வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பி அதிர்ச்சி

பொள்ளாச்சியில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி தராததால் மனமுடைந்த காண்ட்ராக்டர் வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார், தான் கொடுத்த கடனை திருப்பித் தராததால் வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சக்தி குமாருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர் சமத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு ரூ.2.50 லட்சமும், கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷாவுக்கு ரூ.1.80 லட்சமும், ஆவல் சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு ரூ.8 லட்சமும் கடனாகக் கொடுத்திருந்தார். இந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது மூவரும் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சக்தி குமார், தனது மரணத்திற்கு தன்னிடம் கடன் வாங்கி திருப்பித் தராத மூவரும்தான் காரணம் எனக் கூறி செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு, ஜமீன் கோட்டான்பட்டி ராமர் கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார், சக்தி குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...