ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் மெனோபாஸ் கிளினிக் திறப்பு விழா

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் மெனோபாஸ் கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.



கோவை: ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள மெனோபாஸ் கிளினிக்கின் திறப்பு விழா நிகழ்வு ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளிகள் மையத்தில் இன்று (10 ஆக.) நடைபெற்றது.



ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி இவ்விழாவிற்கு தலைமை வகித்தார்.



இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மதுரை மெனோபோஸ் சொசைட்டியின் தலைவர் டாக்டர் சுமதி கலந்து கொண்டார்.



இவ்விழாவில் மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்தும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் மெனோபோஸ் காலத்தில் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



டாக்டர் சுமதி கூறுகையில், "மெனோபாஸ் என்பது இயற்கையாக நிகழக்கூடிய ஒன்று. இது பெண்களை மகப்பேறு நிலையில் இருந்து மகப்பேறு அடைய இயலாத சூழலுக்கு செல்லும் நிலை. மகப்பேறு நிலையிலிருந்து மெனோபஸ் நிலையை நோக்கி செல்லும் மாற்றத்தின் போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் முறையற்ற மாதவிடாய் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள்" என்றார்.

அவர் மேலும், "உலக சுகாதார அமைப்பு (WHO) 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலில், இந்திய பெண்களின் ஆயுட்காலம் 2025 ஆம் ஆண்டு 75 ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் மெனோபாஸ் அறிகுறிகளால் பாதிக்கப்படுகிறார்கள். இது நன்கு திட்டமிடப்பட்டு முறையாக அமைக்கப்பட்ட மெனோபாஸ் கிளினிக்கிற்கான தேவையை உணர்த்துகிறது. இத்தகைய மெனோபாஸ் கிளினிக் அமைக்கப்படுவது, வயோதிகர்கள் ஆரோக்கியமாக இயக்கத்துடன் வாழ வழிவகுக்கும்" என்றார்.

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் துறைத் தலைவர் டாக்டர் அமுதா கூறுகையில், "மெனோபாஸ் ஆன பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் பல உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். எனவே வருமுன் காப்போம் என்ற நோக்கத்தில் இந்த மெனபோஸ் கிளினிக்கை ஆரம்பித்துள்ளோம். பெண்கள் மெனோபாஸால், தூக்கமின்மை, மன உளைச்சல், பதற்றம் உள்ளிட்ட அறிகுறிகளால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். முறையான மருத்துவ ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இத்தகைய அறிகுறிகளிலிருந்து விடுபடலாம்" என்றார்.

அவர் மேலும், "தற்போது புற்றுநோய்கள் அதிகரித்து வருவதால், பெண்கள் மெனோபாஸ் கிளினுக்குகளில் பரிசோதித்து முறையான மருத்துவ உதவிகள் பெரும்போது மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை தடுக்கலாம். சமூகத்திற்காக தொடர்ந்து உழைத்து வரும் ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மெனோபஸ் காலத்தில் பெண்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே இந்த மெனோபாஸ் கிளினிக்கை துவங்கியுள்ளது" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...