கோவைக்கு அதிமுக கொண்டுவந்த திட்டங்களையே திமுக அரசு திறந்து வைக்கிறது - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவையில் உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலத்தை பார்வையிட்ட எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே திமுக அரசு திறந்து வைப்பதாக குற்றம்சாட்டினார். காவல்துறையுடன் அதிமுகவினர் வாக்குவாதம்.



கோவை: கோவையில் உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.



இன்று கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி மேம்பாலத்தை பார்வையிட்டார்.



இவரது வருகையொட்டி அதிமுகவினர் பாலத்தின் முன்பாக பட்டாசு வெடிக்க முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் பட்டாசுகளை பறிமுதல் செய்ததால், அதிமுகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பாலத்தை காரில் சுற்றி பார்த்த எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.



எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "கோவை மாவட்டத்திற்க்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார். அந்த வகையில் கோவை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலம் அமைக்க முதல்வராக இருந்த ஜெயலிதா அவர்கள் சட்டபேரவையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக கூடுதல் நிதி ஒதுக்கி எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலம் கட்ட உறுதுணையாக இருந்தார். அவருக்கு கோவை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

மேலும், "இந்த பாலம் வேலை முழுமையாக இன்னும் முடியவில்லை, அரசு விரைந்து முடிக்க வேண்டும். கோவைக்கு அதிமுக சார்பில் கொண்டு வந்த திட்டங்களை தான், திமுக அரசு திறந்து வைக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவை மாவட்ட மக்களின் மீது அன்பு வைத்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்காத திட்டங்களை எல்லாம் தந்துள்ளார். இந்த புதிய பாலத்தில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்களை காவல்துறையினர் எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...