பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நீர்ப்பாசன கண்காணிப்புக் குழு கூட்டம்

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. நீர் திருட்டை தடுக்க பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்திற்கு விரைவில் திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு நான்கு சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடை மடைக்கு நீர் செல்வதை முறைப்படுத்துவது மற்றும் நீர் திருட்டை தடுப்பது குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இன்று (09.08.2024) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப., தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் தாலுகா பகுதிகளுக்கும், கடைமடை பகுதியான வெள்ளக்கோவில், குண்டடம் மற்றும் உடுமலை பகுதிக்கு பாசன நீர் முறையாக செல்ல வேண்டியும், நீர் திருட்டை தடுக்கவும் நீர்வளத்துறையினருக்கு சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், தண்ணீர் திருடப்படும் பகுதியில் மின்சாரம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கவும், கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடும் காலங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது. தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...