கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் கருப்பு உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்வில் கருப்பு உடை அணிந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்கள் வேறு உடை அணிந்து வருமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.


கோவை: கோவை பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் குடிமையியல் பணி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் குடிமையியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஆளுநரின் வருகையை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கு கருப்பு உடையில் வந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.



இதனால் காவல் துறையினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கருப்பு உடை அணிந்த மாணவ, மாணவியரை அரங்கிற்குள் அனுமதிக்க மறுத்த காவல்துறையினர், அவர்களை வேறு உடை அணிந்து வருமாறு கூறி திருப்பி அனுப்பினர்.

கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க பல்வேறு கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களுக்கு தனித்தனி அறைகளில் நிகழ்ச்சியைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போதுமான அளவில் அறைகள் ஏற்பாடு செய்யப்படாததால், நிகழ்ச்சிக்கு வந்த மாணவ, மாணவியரை உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் வாயில் முன்பாக மாணவ மாணவியர் நிறுத்தி வைக்கப்பட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகே அவர்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்து வேறு உடை அணிந்து வருமாறு திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...