உடுமலை அருகே பெரிய வாளவாடி குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு - விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார்

உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சியின் சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு குளம், குட்டைகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீராதாரங்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் களி மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, விவசாயிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்து தாசில்தார் அளவில் அனுமதி பெற்று மண் எடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு ஒரு அமைப்பைச் சேர்ந்த சில விவசாயிகள் இடையூறு விளைவித்து வருவதாகவும், பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதுடன், வண்டல் மண் அள்ளுவதற்காக கொண்டு வரப்பட்ட டிராக்டர், லாரிகள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றுக்கு வாடகை கொடுத்து நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த விவகாரம் தொடர்பாக ஒன்று திரண்ட விவசாயிகள் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெ.சுகுமாறன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது விவசாயிகள், "பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சப்டியார் குட்டையில் வண்டல்மண் அள்ளும் பணியை ஒரு சிலர் சுய லாபத்திற்காக தடுத்து இடையூறு செய்து வருகின்றனர். அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லை என்றால் வாளவாடி பகுதியில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...