தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் எம்.ஏ. பட்டதாரிகளுக்கு 50% இட ஒதுக்கீடு - அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

பொள்ளாச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிகளுக்கு தமிழ் எம்.ஏ. பட்டதாரிகளுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். பரம்பிக்குளம் ஆழியார் திட்ட நினைவு மணிமண்டபப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



கோவை: தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிகளுக்கு தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.



பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் ரூ.4.28 லட்சம் மதிப்பில் கட்டப்படும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட நினைவு மணிமண்டபப் பணிகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழில் எம்.ஏ. பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு TNPSC மூலமாக உதவி இயக்குனர்கள் நியமனம் என்ற நடைமுறை இதுவரை இல்லை. தமிழ் எம்.ஏ. படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஏற்கனவே தட்டச்சராக பொறுப்பேற்று அதன் பின் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின்பு உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.

மேலும், "வரும் காலங்களில் 50 சதவீதம் தமிழ் எம்.ஏ. படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் செயல்படுத்த காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் V.K பழனிச்சாமி, N. மகாலிங்கம் உள்ளிட்டோரின் நினைவாக இந்த மணிமண்டபம் கட்டப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...