'நான் ஆணவக் கொலைக்கு ஆதரவானவன் அல்ல!' - கோவையில் நடிகர் ரஞ்சித் உறுதி

கோவையில் நடிகர் ரஞ்சித், 'கவுண்டம்பாளையம்' திரைப்பட குழுவினருடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். படத்திற்கு குறைவான திரையரங்குகள் கிடைத்ததற்கு வருத்தம் தெரிவித்த அவர், ஆணவக் கொலைக்கு எதிரானவர் என உறுதியாகக் கூறினார்.



கோவை: கோவை ராம் நகர் பகுதியில் நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட 'கவுண்டம்பாளையம்' திரைப்பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



இச்சந்திப்பில் நடிகர் ரஞ்சித் பேசுகையில், "கவுண்டம்பாளையம் திரைப்படம் நீண்டகால பிரச்சனைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஆதரவளித்த மக்களுக்கு நன்றி," என்று கூறினார்.

திரையரங்குகள் குறைவாகக் கிடைத்தது குறித்து அவர், "பெரிய அதிர்ச்சி எதுவும் இல்லை. இது எதிர்பார்த்தது தான். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் சிறகுகள் உடைக்கப்படுகிறது என்பதை உணர்கிறேன். நான் பிறந்த கோவை மாவட்டத்திலும் குறைந்த திரையரங்குகள் கிடைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது," என்றார்.

"பெற்றோர்களுக்காகவும் குடும்பங்களுக்காகவும் தான் இந்தப் படத்தில் செய்தி சொல்ல வருகிறேன். என் மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. என் மீது சமூக வலைதளங்களில் திரித்து கூறப்படுகிறது. ஆணவக் கொலைக்கு எதிரானவன் நான்," என்று அவர் விளக்கினார்.

படத்தில் நடித்த நடிகர்கள் குறித்து ரஞ்சித், "இந்த படத்தில் அறிமுகமாகியுள்ள ஹீரோ ஹீரோயின் இருவரும் நன்கு நடித்துள்ளார்கள். வில்லன் கதாபாத்திரமும் நன்றாக நடித்துள்ளார். திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்," என்று கேட்டுக்கொண்டார்.

"சென்சார் போர்டு சர்டிபிகேட் இருந்தும் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் நாங்கள் தோல்வியடையவில்லை. இப்படத்தைப் பார்த்த மக்கள் பாராட்டுகிறார்கள். அதுவே எங்கள் வெற்றி," என்றார் ரஞ்சித்.

OTT வெளியீடு குறித்து அவர், "கூடிய விரைவில் இந்தப் படம் OTTயில் வெளியாகும். OTTயில் வெளியிடுவதிலும் சர்ச்சை வந்தால், வீடு வீடாக கேசெட் தருவோம்," என்று கூறினார்.

"நான் ஆணவக் கொலைக்கு ஆதரவானவன் அல்ல! அல்ல! அல்ல!" என்று திட்டவட்டமாக உறுதியளித்தார் ரஞ்சித்.

அவர் மேலும், "சினிமாவால் தான் வன்முறைகள் அதிகமாகிறது என்று என்னால் சொல்ல முடியாது. அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. ரஞ்சித் 3.O என்ற புதிய உத்வேகத்துடன் இருக்கிறேன்," என்றார்.

படத்தில் நடித்த நடிகை ஆல்பியா, "படத்தைப் பார்க்காமலே சர்ச்சையை கிளப்பி விட்டார்கள். படத்தைப் பார்த்திருந்தால் இந்த சர்ச்சையே வந்திருக்காது," என்றார். நடிகர் à®…னீஷ், "இந்தத் திரைப்படம் ஜாதி படமே கிடையாது. நல்ல படமாகத் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்திற்கு எதிராக எடுக்கப்படவில்லை," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...