பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: 28 மாநிலங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி தொடங்கியது. 28 மாநிலங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அமைச்சர் மு.பெ. சாமிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார்.



Coimbatore: பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு ரோலர்ஸ் ஸ்கேட்டிங் சங்கம் மற்றும் பொள்ளாச்சி ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் இப்போட்டி நடத்தப்படுகிறது. கோவை மற்றும் பொள்ளாச்சியில் ஆறு இடங்களில் நடைபெறும் இந்த போட்டிகளில் 28 மாநிலங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பயிற்சி போட்டிகள் நடைபெற்றன. நேற்று இரவு பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் ஸ்கேட்டிங் வீரர்கள் அணிவகுப்போடு போட்டி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.



போட்டியில் காலில் சக்கர சூ அணிந்து போட்டியாளர்கள் மின்னல் வேகத்தில் சென்றது சுற்றி இருந்த பார்வையாளர்களை உற்சாகபடுத்தியது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்பார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

போட்டியின் தொடக்க விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சுவாமி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா, பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போட்டி ஒருங்கிணைப்பாளர் கணபதி ராஜ்குமார் கூறுகையில், "இந்த தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இது இளம் ஸ்கேட்டிங் வீரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...