பொள்ளாச்சி அருகே கோட்டூர் காவல் நிலையம் முன் பொதுமக்கள் முற்றுகை முயற்சி - காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையம் இளைஞர் தற்கொலை வழக்கில் நியாயம் கோரி பொதுமக்கள் கோட்டூர் காவல் நிலையம் முன் முற்றுகை முயற்சி. காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பொதுமக்கள் காவல் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்பவர் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில், தான் மூன்று நபர்களுக்கு பணம் கொடுத்திருந்ததாகவும், அதனை அவர்கள் திருப்பித் தராமல் மோசடி செய்ததால் தனது மரணத்திற்கு சாதிக் பாஷா, கணேசன் மூர்த்தி, செந்தில் நாதன் ஆகிய மூவரும் காரணம் என சக்தி குமார் குறிப்பிட்டிருந்தார்.



இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணேச மூர்த்தியை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாதிக் பாஷா மற்றும் செந்தில்நாதன் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சக்தி குமாரின் தற்கொலைக்கு நீதி கேட்டும், தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோட்டூர் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட முயற்சித்தனர்.

இதுகுறித்து அறிந்த காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் பொதுமக்கள், நாளைக்குள் தலைமறைவாகியுள்ள இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்யாவிட்டால் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...