திருப்பூரில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

திருப்பூர் கணக்கம்பாளையத்தில் பாஜக மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 'திருப்பூர் டிக்லரேஷன்' அறிவிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அளவிலான மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.

இந்த முக்கிய கூட்டத்தில் தமிழக மேற்பார்வையாளர் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மாலை 4 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.



கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "அடுத்த 500 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறோம். திருப்பூரில் இருந்து தமிழகத்திற்கு ஒரு முக்கிய செய்தியை கொடுக்க இருக்கிறோம். 'திருப்பூர் டிக்லரேஷன்' அறிவிக்கப்பட உள்ளது, இது திருப்புமுனையாக அமையும்" என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சி.ஆர். சரஸ்வதி ஆகியோரும், பாஜக முக்கிய தலைவர்களான எச். ராஜா, சரத்குமார், முருகானந்தம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், 66 மாவட்ட தலைவர்கள், 1,216 மண்டல தலைவர்கள், 180 மாநில நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...