உடுமலை அருகே அரசு துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50 சதவீதம் பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

உடுமலை இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கூட்டத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.



விஜயா தனது உரையில், தமிழக அரசின் பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றைப் பற்றியும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தாரணி, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர், பெற்றோர், மாணவர் இடையே நல்லுறவை மேம்படுத்துவதாகக் கூறினார்.

கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி ஆகியவை பற்றிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.



இக்கூட்டத்தில், புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கீதா தலைவராகவும், பிரியா துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர், முன்னாள் மாணவர்கள் உட்பட மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தின் இறுதியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கோணீஷ்வரி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...