உடுமலை அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா

உடுமலை அருகே அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் தாயின் பெயரில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க உறுதியேற்றனர்.


Coimbatore: உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் கேப்டன் கே. மணிகண்டன் மற்றும் பள்ளி வளாகத்தின் முதல் பெண்மணி லட்சுமி மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.



முதல்வர் மணிகண்டன் பேசுகையில், "மரங்கள் நமது கிரகத்தின் உயிர் நாடிகள் ஆகும். அவற்றை நடவு செய்வதன் மூலமாக நாம் சுற்றுச்சூழலுக்கு பங்களித்து தாய் பூமியையும் பாதுகாக்கின்றோம். அத்துடன் இனிமேல் வரவிருக்கும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதும் நமது கடமையாகும்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக பள்ளி வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.



இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, ஒவ்வொரு கேடட்டும் தாங்கள் நடவு செய்த மரக்கன்றுக்கு தங்களது தாயின் பெயரை சூட்டி, அதனை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த முயற்சி மூலம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தாய்மையின் மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வை வலியுறுத்தும் "தாய்க்கு செடி" நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமராவதி கிராம மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இது போன்ற முயற்சிகள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான சூழலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...