உடுமலையில் சர்வதேச கராத்தே போட்டி: 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

உடுமலையில் மூன்றாவது ஆண்டு சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது. இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 4 முதல் 60 வயது வரையிலான வீரர்கள் 5 பிரிவுகளில் போட்டியிட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மூன்றாவது ஆண்டு சர்வதேச அளவிலான கராத்தே போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நான்கு வயது முதல் 60 வயது வரையிலான வீரர்கள் கட்டா, துமிதே, ஓபன் கட்டா, ஓபன் துமிதே, வெப்பன் கட்டா என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளுக்கு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நடுவர்கள் கலந்து கொண்டனர்.



மாணவர்களின் திறமைகளின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் எதிராய், ஈஸ்வர்கப்ளே தலைமையில் 50க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் சாகசம் செய்து காட்டிய நிகழ்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், மலேசியா நாட்டைச் சேர்ந்த மூத்த கராத்தே ஆசிரியர்கள் ஆனந்தன் விக்னேஸ்வரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் Eswaran, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், கராத்தே போட்டி ஒருங்கிணைப்பாளர் உடுமலை அருள்குமார், உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், வழக்கறிஞர் சிதம்பரசாமி, மருத்துவர் வாசுதேவன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஆடிட்டர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...